News Image

மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?

By Admin

முட்டைகளை வேக வைப்பதற்கான சிறந்த முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்த புது செயல்முறையில் ஒரு முட்டையை வேக வைப்பதற்கு சுமார் அரை மணி நேரம் வரை ஆகலாம் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையை சரியான பதத்தில் வேக வைப்பது என்பது மக்களின் தினசரி வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று ஆகும். நீங்கள் காலை உணவுக்காக முட்டைகளை வேக வைப்பீர்கள். சில நிமிடங்கள் கழித்து, முட்டை சுவையாகவும் நன்றாகவும் வெந்திருக்கும் என்ற நம்பிக்கையில், வேக வைத்த முட்டையின் ஓடுகளை உடைத்து, ஒரு துண்டு பிரெட்டை எடுத்து முட்டையோடு சாப்பிட தயாராவீர்கள். ஆனால் முட்டையை உடைத்துப் பார்த்தால், அதன் மஞ்சள் கரு உடைந்திருக்கும். மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கரு கலங்கிய நீர் போல இருக்கும். இப்படித்தான் சரியாக வேகாத முட்டை தரும் ஏமாற்றத்தோடு காலைப் பொழுது தொடங்கும்.