அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, அங்கு வேலை செய்துவந்த நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞரை சுட்டு கொன்றுவிட்டு தப்பினார். இந்த கொள்ளை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. விக்னேஷின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்து வர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உடலை தாயகம் எடுத்து வருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான விக்னேஷ் உயிரிழந்தது எப்படி? சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது? உடன் பணியாற்றியவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்திய தூதரகம் கூறுவது என்ன?