News Image

குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? ஓர் அலசல்

By Admin

டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற முதல் நாளில், குடிபெயர்ந்தோரின் வருகையை படையெடுப்பு என்று குறிப்பிட்டார். மேலும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை அறிவித்த டிரம்ப், அப்பகுதியைப்பாதுகாக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பிறந்த எவரும் இயல்பாக அமெரிக்க குடியுரிமை பெற உதவும், பிறப்பால் கிடைக்கும் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆவணமற்று குடியேறும் மக்களுக்கு எதிராக, பெருமளவிலான நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் அதிபர் டிரம்ப் முன்னர் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உலகளவில் அதிகப்படியான குடியேறிய மக்கள் உள்ள அமெரிக்காவில், குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்? குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பதை விவரிக்கின்றது இக்கட்டுரை.