News Image

தி.மு.க. கொடி காரில் பெண்கள் துன்புறுத்தல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

By Admin

சென்னை: 'சென்னை ஈ.சி.ஆரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் அண்ணாமலை அளித்த பேட்டி: மாநில அரசு சரியான தகவல் கொடுக்காமல் டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு காரணமாக இருந்தும் கூட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரத்து செய்தது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் போட்டதால் நடந்ததாக கூறுகிறார். இதற்கு முன் சட்டசபையில் போட்ட தீர்மானம் எல்லாம் நடந்து இருக்கிறதா? பாதுகாப்பில்லை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் பிரதமர் மோடி தான். நாளை அரிட்டாப்பட்டி சென்று விவசாயிகளை சந்திக்கிறோம். சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. பெண்களை தி.மு.க., கொடி கட்டிய காரில் துரத்தி சென்ற வீடியோவை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது. போலீசாருக்கு எந்த வித உபகரணங்களும் கொடுக்காமல் தி.மு.க., அரசு இருக்கிறது. அச்சுறுத்தல் கூடாது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு ஆணி துரும்பை கூட கிள்ளி போடாமல் தி.மு.க., அரசு இருக்கிறது. செய்தியாளர்கள் தொலைபேசியை வாங்கி பார்ப்பதை முட்டாள் தனமான வாதமாக நான் பார்க்கிறேன். செய்தியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. செய்தியாளர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. ஒரு செய்தியாளர்களை அழைத்து அச்சுறுத்தல் செய்தால், தமிழகத்தில் நடக்கும் எந்த விதமான விஷயங்களையும் வெளியே கொண்டு வர பயப்படுவார்கள்.