News Image

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து; உறையும் குளிரில் மீட்புப்பணி - இதுவரை தெரிந்த தகவல்கள்

By Admin

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேரை கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. பதினெட்டு பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சி பி எஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள ரோனால்ட் ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையம் அனைத்து விமானங்களையும் தரையிறக்கியுள்ளது. என்ன நடந்தது? ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்த பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியிலிருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது. அதேநேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்திலிருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.