News Image

மணிப்பூரில் வன்முறை வெடித்த ஒன்றரை ஆண்டுக்கு பிறகு 'பாஜக' முதல்வர் திடீர் ராஜினாமா - கடிதத்தில் கூறியது என்ன?

By Admin

மணிப்பூர் மாநில முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆளுநர் மாளிகைக்குச் சென்று அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். பிரேன் சிங்கின் தனி உதவியாளர் தீபக் ஷிஜகுருமா, பிபிசியிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஏ.என்ஐ. செய்தி முகமையும் படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பித் பத்ரா மற்றும் பிற மாநிலத் தலைவர்களும் பிரேன் சிங்குடன் இருப்பதை அந்த புகைப்படத்தில் காணலாம்.