இஸ்ரேல்–ஈரான் மோதலுக்குப் பின்னர் ஈரான் உயர்மட்ட தலைவர் அலி கமேனி முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் வெளியே தோன்றியுள்ளார். 85 வயதான காமெனி, அஷூரா தினத்தை முன்னிட்டு தெஹ்ரானில் உள்ள மசூதியில் இடம்பெற்ற ஒரு மத நிகழ்வில் கலந்துகொண்டார்இது ஷியா முஸ்லிம்கள் கொண்டாடும் மிக முக்கியமான தினமாகும்.இந்தக் காணொளியை ஈரானின் அரச தொலைக்காட்சி நேற்றையதினம் ஒளிபரப்பியது.குறித்த காணொளியில், அலி கமேனி உள்நுழையும் போது மக்கள் எழுந்து நின்று கைக்கொட்டி ஆர்ப்பரித்தனர்.அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்ஜூன் 13ஆம் திகதி மோதல் தொடங்கியதிலிருந்து அலிகமேனி எந்தவொரு நேரடி நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. அவர் அளித்த அனைத்து உரைகளும் முன்பதிவு செய்யப்பட்டவையாக மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது..