News Image

ட்ரம்புடனான மோதலின் உச்சக்கட்டம் : புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்

By Admin

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து, அவரது தேர்தல் பிரசார நிதியாளராக செயற்பட்ட எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார். விண்வெளி மற்றும் வாகனத்துறையில் கோடீஸ்வரரான மஸ்க், ட்ரம்பின் "Big Beautiful Bill" வரி யோசனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். அத்துடன் இந்த யோசனை, அமெரிக்காவை திவாலாக்கும் என்றும் கூறியிருந்தார்இந்தநிலையில் ஜனநாயக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்பதற்கு பதிலாக அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்று அவசியம் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்இந்த கருத்துக்கு மத்தியிலேயே அவர் தற்போது புதிய கட்சி தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்கக் கட்சி என்ற பெயரில் இந்த புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது என்று அவர் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்தனது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் அவரது ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் நிறுவனம் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறிய மஸ்க், ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக நூற்றுக்கணக்கான மில்லியன்கள் டொலர்களை செலவிட்டார்.அத்துடன், அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் இருந்து அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தினார். எனினும் Big Beautiful வரி தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் திடீரென முரண்பட்டனர். இந்தநிலையில், மஸ்க்கின் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெறும் பில்லியன் கணக்கான டொலர் மானியங்களை நிறுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார். இதேவேளை மஸ்க், ட்ரம்புடன் மீண்டும் மீண்டும் பகைமை கொண்டிருப்பது, 2026 இடைக்கால காங்கிரஸ் தேர்தலில் தங்கள் பெரும்பான்மையைப் பாதிக்கக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.