News Image

ஆப்கானியர்கள் இன்றுடன் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கைது

By Admin

ஈரானில் வசித்துவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் ஈரானில் இருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆப்கானியர்கள் ஈரானை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஈரானில் 30 ஆண்டுகளுக்குமேல் அகதிகளாக வசித்து வருகின்றனர்இந்நிலையில் ஆப்கானியர்கள் இன்றுடன் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளதுமேலும், ஈரானில் ஆப்கானியர்களுக்கு எதிரான நிலைப்பாடு உள்ள நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதலின்போது இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஆப்கானியர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது